நிறுவனம்:யாழ்/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் {{{ஊர்}}}
முகவரி தம்பசிட்டி வீதி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இப்பாடசாலையானது யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் ஒரு பெண்கள் உயர்தரப் பாடசாலையாகும். வடமராட்சிப் பகுதியில் மேலைப்புலோலியில் 23.07.1944ஆம் ஆண்டு வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. திரு.மு.கார்த்திகேசு அவர்களின் அயராத முயற்சியில் அவரது இல்லத்திலேயே ஆனிமாதம் வைத்திய கலாநிதி சபாபதிஐயர் அவர்களால் 46 மாவணர்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 11 பேரைக் கொண்ட சைவவித்தியா விருத்திச் சபையினரால் பாடசாலை நிர்வகிக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு தற்போதைய காணிக்கு மாற்றப்பட்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை கற்கும் 369 மாணவர்களுடன் 01.10.1946ஆம் ஆண்டு அரச உதவி பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது.

உன்னை அறி என்ற மகுட வாசகத்துடன் பாடசாலைக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் பாடசாலைக்கான காணிகளை பெற்றோர்களும் பெரியோர்களும் இனமாகவும் நன்கொடையாகவும் கொடுத்துள்ளன. 1944ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபம் 1954ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிஷனரிப் பாடசாலைகளுடன் போட்டி போட்டு மாணவர்கைள வீடுவீடாகச் சேர்க்க வேண்டிய நிலை இருந்த போதும் 1950ஆம் ஆண்டின் பின் மாணவர் தொகையில் அதிகரிப்பு காணப்பட்டது. இப் பாடசாலையின் முதலாவதுஅதிபர் திருமதி மீனாட்சி பொன்னுத்துரை ஆவார். திரு.எஸ்.இரத்தினசிங்கம், டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், திரு.வி.கே.சிவப்பிரகாசம், திருமதி நல்லையா போன்றோரின் முயற்சியால் வகுப்பறைக் கட்டடங்கள் உருவானது. திரு.சபாபதி அவர்களால் இரசாயனவியல் ஆய்வுகூடம் அத்திவாரமிடப்பட்டு அவரின் மகனால் பூர்த்தியாக்கப்பட்டது. மலேயன் பென்சன் எடுக்கும் உத்தியோகத்தர் குழுவால் தாவரவியல், பௌதீகவியல் ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டன. 1957ஆம் ஆண்டு திரு.பொன்னையா அவர்களினால் 60 படுக்கை வசதிகளைக் கொண்ட விடுதி அமைக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு இப் பாடசாலை முதலாந்தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு காரணமான அதிபர் செல்வி சரவணமுத்துவின் பொற்காலமாகும். 1966-1969ஆம் ஆண்டில் காயத்திரி கணேசன் அதிபரானார். நடராஜப் பெருமானின் திருவுருவம் அமைக்கப்பட்டு இறை அஞ்சலி, சமய ஆராதனை முதலான சைவ தமிழ்க்கலாசாரம் வளர்ந்தது.


வளங்கள்

  • நூலக எண்: 54217 பக்கங்கள் {{{2}}}
  • நூலக எண்: 54230 பக்கங்கள் {{{2}}}
  • நூலக எண்: 54231 பக்கங்கள் {{{2}}}
  • நூலக எண்: 54234 பக்கங்கள் {{{2}}}
  • நூலக எண்: 54241 பக்கங்கள் {{{2}}}
  • நூலக எண்: 54197 பக்கங்கள் {{{2}}}
  • நூலக எண்: 54243 பக்கங்கள் {{{2}}}