நிறுவனம்:கருணா நிலையம்

From நூலகம்
Name கருணாநிலையம்
Category சமூகசேவை நிறுவனம்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place கிளிநொச்சி
Address கருணாநிலையம், கிளிநொச்சி
Telephone
Email
Website

பெண்கள், நம்பிக்கையுடன் வாழ இந்த உலகில் அவர்களுக்கு வாழ்வதற்கான ஒரு தன்னம்பிக்கை கொடுக்கும் நிறுவனமாக கருணாநிலையம் உள்ளது. இந் நிறுவனம் 1850ஆம் ஆண்டு கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்நிறுவனம் வைரவிழாவை கொண்டாடியுள்ளது. பல துறை சார்ந்த பெண்களை இந்நிறுவனம் உருவாக்கி இந்த சமூகத்திற்கு கொடுத்து தலைநிர்ந்து கிளிநொச்சியில் நிற்கிறது. இன்னும் தனது சேவைகளை செய்து வருகிறது.பெண்குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார், விசேட தேவைக்குட்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், பாதுகாப்பாற்றோர், வன்முறைக்குட்படுத்தப்பட்டோர், பாதிப்புக்குள்ளானோர், ஏழைகள் அனைவருக்கும் கருணா நிலையம் நிழலாக இருந்து தனது சேவையை செய்து வருகிறது. திருச்சபை தூதுப்பணி மன்றத்தின் (church missionary society) அறிவிப்பாளராக 10.11.1927இல் இலங்கை வந்திருந்த செல்வி மியூறியல் வயலட் ஹட்சின்ஸ் கருணா நிலையத்தின் ஸ்தாபகராவார். 07.03.1899 ஆம் ஆண்டு வேல்ஸ்சில் பிறந்த இவர் 1926ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானிப் பட்டதாரியாவார். இவர் ஆசிரியராக கொழும்பு சுணடுக்குளி, கோப்பாய், உடுவில், நல்லூர் போன்ற இடங்களில் கற்பித்து ஓய்வுபெற்றார். ஓய்வின் பின் இங்கிலாந்து திரும்பினாலும் அங்கு இளைப்பாற முடியவில்லை. மீண்டும் இலங்கை திரும்பி கிளிநொச்சியில் கருணா நிலையத்தை தொடங்கினார். 1955ஆம் ஆண்டு 15 இளம் பெண்களுடன் கருணா நிலையப் பணி ஆரம்பமானது. யுத்தத்தின் போது 1995ஆம் ஆண்டு ஜெயபுரம், 2003ஆம்ஆண்டு மீண்டும் கிளிநொச்சி திரும்பி மீண்டும் தனது சேவைகளை செய்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சேவையை வழங்கியது. 2008ஆம் ஆண்டு யுத்தத்தின் கொடூர தாண்டவத்தின்போது முல்லைத்தீவு மாவட்டம் நோக்கி இடம்பெயர்ந்தது. 2009ஆம் ஆண்டு வவுனியாவில் முகாம் வாழ்க்கைக்கு உட்பட்டது. மீண்டும் 2009ஆம் ஆண்டு ஒக்டோபரில் தனது சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து செய்யத் தொடங்கியது. 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பி வன்னி மக்களுக்கு தனது சேவையைத் தொடர்கிறது.