கந்தன் கருணை ஓரங்க நாடகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கந்தன் கருணை ஓரங்க நாடகம்
621.JPG
நூலக எண் 621
ஆசிரியர் ரகுநாதன், என். கே.
நூல் வகை தமிழ் நாடகங்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 16

வாசிக்க

நூல்விபரம்

அறுபதுகளில் சாதியத்திற்கெதிரான வெகுஜனப்போராட்ட சித்தரிப்பு நாடகம். தேவலோகத்திலிருந்து நேரில் வந்த கந்தன் மேட்டுக்குடியினரின் அடாவடித்தனங்களைக் கண்டு அநீதியெனத் தீர்மானிக்கிறார். அன்பு மார்க்கம் தவறிவிட்டதை உணர்கிறார். அசுரர்களைச் சங்காரித்த தனது சக்திவாய்ந்த வேலை நிராயுதபாணிகளான பஞ்சமப் பக்தர்களுக்குக் கொடுக்கிறார். 1969இல் எழுதப்பட்ட இந்நாடகம் முதலில் நெல்லியடி அம்பலத்தாடிகள் சார்பில் இளைய பத்மநாதனின் நெறியாழ்கையில் காத்தான்கூத்துப் பாணியில் உருவமைத்து மேடையேற்றப்பட்டது. சமகாலப் பிரச்சினையொன்றை முன்னெடுத்து அதனை மக்கள் மத்தியில் பரப்பியதன் மூலம், அந்தப் பிரச்சினையை வென்றெடுக்கச் சகல மக்களையும் அணிதிரட்டிய சிறப்பு இந்நாடகத்திற்கு உரியது.


பதிப்பு விபரம்
கந்தன் கருணை. என்.கே. ரகுநாதன். தெகிவளை: என்.கே.ரகுநாதன், 5ஏ, பியரத்னாராம வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 *14 சமீ.

-நூல் தேட்டம் (# 4527)


இவற்றையும் பார்க்கவும்