ஆளுமை:வில்வரத்தினம், சுப்பிரமணியம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வில்வரத்தினம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1950.08.07
இறப்பு 2006.12.09
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்வரத்தினம், சுப்பிரமணியம் (1950.08.07 - 2006.12.09) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் 1970களில் எழுத ஆரம்பித்ததுடன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்டு தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். இவர் நீண்ட காலமாகப் புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபராகப் பணியாற்றி கல்வி மேம்பாடிற்காக அயராது உழைத்தார். இவரது காலத்தில் பாடசாலையில் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு சமய ஆராதனை மண்டபம், புதிய வகுப்பறை மண்டபம், தற்காலிக வகுப்பறைக் கட்டிடம், வெளி அரங்கு போன்றன அமைக்கப்பட்டது.

இவர் புங்குடுதீவு வயலூர் முத்துமாரி அம்மன் கோயிற் தொண்டராயும் பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோயில் நிர்வாக சபை உறுப்பினராயும் இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். இவர் பொதுப்பணி, சமூகப்பணி, சமயப்பணி, கல்விப்பணி என அனைத்திலும் சிறப்பாகச் சேவையாற்றிப் புங்குடுதீவின் வளர்ச்சியில் பங்காற்றினார்.

இவரது படைப்புக்களாக அகங்களும் முகங்களும், காற்றுவெளிக் கிராமம், காலத்துயர், நெற்றிமண் ஆகிய கவிதைத் தொகுப்புக்களைப் படைத்தார். இவரது கவிதைப்படைப்புக்கள் 'உயிர்த்தெழும் காலத்துக்காக' என்ற தொகுப்பாக 2001 இல் வெளியாகியது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 137 பக்கங்கள் 425-428
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 97-99
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 13
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 96-99
  • நூலக எண்: 1024 பக்கங்கள் 37-39
  • நூலக எண்: 10200 பக்கங்கள் 03-10
  • நூலக எண்: 11500 பக்கங்கள் 27-30
  • நூலக எண்: 11649 பக்கங்கள் 183