ஆளுமை:வற்சலா, துரைசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வற்சலா
தந்தை வயிரமுத்து
தாய் இராமாசிப்பிள்ளை
பிறப்பு 1968.10.15
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வற்சலா, துரைசிங்கம் (1968.10.15) யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை வயிரமுத்து; தாய் இராமாசிப்பிள்ளை. ஆரம்ப கல்வித் தொடக்கம் உயர் கல்வி வரை தெல்லிப்பளை மகாஜனா கல்விக் கல்லூரியில் கற்றார். யாழ் பல்கலைக்கழக கலைப்பட்டதாரியாவார். தனது 14 வயதிலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்த வற்சலா கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர். மகளிர் விவகாரக் குழுக்களின் தலைவர், மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணத்தின் மனித உரிமைகள் ஊக்குவிப்பாளர், சிரேஷ்ட பிரஜைகள் குழு மனித உரிமைகள் ஆணைக்குழு, நிர்வாக உறுப்பினர், சர்வமதப் பேரவை உறுப்பினர, கலாசார பேரவை வலிவடக்கு உபசெயலாளர், பன்னாலை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர், பன்னாலை மீள் எழுச்சி திட்டம், வாழ்வாதார பொருளாளர் என சமூகம் சார்ந்த பல அமைப்புக்களில் இணைந்து சமூக சேவையை ஆற்றிவருகிறார்.

விருதுகள்

சிறந்த பெண் என்ற விருது வலி வடக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த குருதி கொடையாளர் என்ற ஜனாதிபதி விருது 2018ஆம் ஆண்டு.


குறிப்பு : மேற்படி பதிவு வற்சலா, துரைசிங்கம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.