ஆளுமை:லோகேஸ்வரன், கந்தப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லோகேஸ்வரன்
தந்தை கந்தப்பு
பிறப்பு 1953.06.12
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகேஸ்வரன், கந்தப்பு (1953.06.12 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தப்பு. இவர் 1970 ஆம் ஆண்டிலிருந்து கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றதோடு, ஆர்மோனியத்தை இசைமேதை செல்லத்துரையிடம் கற்று 1976 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியாற்றி வந்துள்ளார்.

இவர் ஆலயங்களில் திருமுறை, பண்ணிசை ஓதுவதுடன் பக்திப்பாடல்கள், பக்திக் கீர்த்தனைகளைப் பக்க வாத்தியம் சகிதம் இசைத்து வந்துள்ளார். இவருக்கு 1998 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய இந்துப் பேரவையினால் ஆர்மோனிய இசையரசு என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 113