ஆளுமை:ரவீந்திரன், முருகேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரவீந்திரன்
தந்தை முருகேசு
தாய் சிவசோதியம்மா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரவீந்திரன், முருகேசு காரைநகர், வலந்தலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தபால் அதிபர். இவரது தந்தை முருகேசு; தாய் சிவசோதியம்மா. இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்தார்.

இவரது முதலாவது சிறுகதையான 'மாறும் மனிதர்கள்' 1990.08.12 இல் வீரகேசரி வார வெளியீட்டில் வெளியானது. இவர் தனது சிறுகதைகளைத் தொகுத்து 'வாழ்க்கைப் பயணம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலாக வெளியிட்டுள்ளார்.

இவர் 1993 இல் வானொலியில் ஒலிபரப்பான 'நாளைய சந்ததி' நிகழ்ச்சி மூலம்1994 இல் வானொலி நாடகக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டுக் கல்விச் சேவையில் 'ஆய்வரங்கம்' நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார்.1997 இல் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகி 1999 இல் செய்தி வாசிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு 2000 ஆம் ஆண்டு ஒப்பந்த அறிவிப்பாளரானார். 2001 இல் நிரந்தர அறிவிப்பாளராகித் தற்போது முதற்தர அறிவிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுப் பணியாற்றுகின்றார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 351
  • நூலக எண்: 11126 பக்கங்கள் பின் அட்டை
  • நூலக எண்: 11178 பக்கங்கள் 05-07