ஆளுமை:பேரின்பநாயகி, கனகரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரின்பநாயகி, கனகரத்தினம்
பிறப்பு 1951.04.21
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரின்பநாயகி, கனகரத்தினம் (1951.04.21 - ) யாழ்ப்பாணம், அரியாலையச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். இவர் பாடும் ஆற்றல்மிக்கவராகவும் இசைநாடகங்களில் நடிப்பவராகவும் காணப்பட்டார். இவர் ஆரம்ப காலங்களில் சமூக நாடகங்களில் நடித்ததுடன் அரிச்சந்திரா, பவளக்கொடி, வீரத்தாய், சாணக்கிய சபதம் ஆகிய நாடகங்களில் நடித்தமைக்காகப் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். இவர் 2008 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை நடத்திய கலைவிழாவில் இடம்பெற்ற சங்கிலியன் நாட்டுக்கூத்தில் பிரபல நாட்டுக்கூத்துக் கலைஞர் முடியப்பு அருட்பிரகாசத்துடன் இணைந்து தன் நடிப்பினை வெளிப்படுத்தினார்.

இவர் யாழ்ப்பாணப் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் 1998 ஆம் ஆண்டு நடத்திய நாட்டுக்கூத்துப் போட்டியில் பவளக்கொடி என்னும் நாட்டுக் கூத்தில் பவளக்கொடியாகப் பாத்திரமேற்று நடித்தமைக்காகச் சிறந்த நடிகைக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். மேலும் இவர் அரிச்சந்திரா இசை நாடகத்தில் சந்திரமதியாக நடித்துப் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 178
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 201