ஆளுமை:திருநாவுக்கரசு, செல்லையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு
தந்தை செல்லையா
பிறப்பு 1950.09.24
ஊர் அல்லைப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, செல்லையா (1950.09.24-) யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், கவிஞன். இவரது தந்தை செல்லையா. இவர் கலைமாணி, முதுகலைமாணி, டிப்ளோமா, முகாமைத்துவ டிப்ளோமா, முதுகல்விமாணி, சைவப்புலவர், பண்டிதர், கலாநிதி, இலங்கை அதிபர் சேவை தரம் - 2, இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு III ஆகிய பட்டங்களைப் பெற்றவராவார்.

சிறு வயதிலிருந்து நாடகம், பேச்சு, எழுத்து ஆகிய துறைகளில் ஆற்றல் மிகுந்த இவர், கவிஞர் க. வ. ஆறுமுகத்தினுடைய “அடைப்புக்குறிகள்“, “பக்க வாத்தியம் இல்லாத பாட்டுக் கச்சேரி” ஆகிய நூல்களைப் பதிப்பித்தும் செய்யுட் தொகுப்பு, டானியலின் எழுத்துக்கள் ஆகிய நூல்களை வெளியிட்டுமுள்ளார். இவரது “டானியலின் எழுத்துக்கள்” என்ற ஆய்வு நூலுக்கு வடக்கு- கிழக்கு மாகாண அமைச்சின் பரிசு, இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஞாபகார்த்தப் பரிசு என்பவை கிடைக்கப் பெற்றது. இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தும் பல நாடகங்களை எழுதியும் நெறியாள்கை செய்துமுள்ளார். இவர் “பூதத்தம்பி” இசை நாடகத்தைப் புதுவடிவில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல அரங்குகளில் அறிவியல் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்த இவர், 2006 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்திய மரபுக் கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். இவரின் கலை இலக்கியப் பணியைப் பாராட்டி வேலணைப் பிரதேச செயலகம் இவரைக் கௌரவித்துக் “கலைவாரிதி” என்ற பட்டம் வழங்கியுள்ளது. கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலை 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலின் ஆசிரியர் குழுவில் இருந்து அந்நூலினூடாக நம்மண்ணில் ஆற்றல் மிகுந்தவர்களாக மிளிர்ந்து மறைந்த தலைவர்களை அறிமுகப்படுத்தியமைக்காகப் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 26
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 73
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 55