ஆளுமை:தம்பித்துரை, கணேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பித்துரை
தந்தை கணேசு
பிறப்பு 1956.02.12
ஊர் யாழ்ப்பாணம், ஆவரங்கால்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பித்துரை, கணேசு (1956.02.13) யாழ்ப்பாணம் ஆவரங்காலைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை கணேசு; தனது ஒன்பது வயதிலிருந்து தோல் வாத்தியங்களை வாசிக்கும் திறமைக் கொண்டவர். ஆரம்பக் கலவியை புத்தகலாட்டி ஸ்ரீ விஷ்ணு வித்தியாலயத்தில் கற்றார். இசையில் இருந்த ஈடுபாடு காரணமாக பாடசாலை காலத்திலேயே பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

அச்சுவேலி வைரவர் கோயில், சிறுப்பிட்டி பூதவராயல் கோயில், ஆவரங்கால் முருகன் கோயில் போன்ற பிரதேச ஆலயங்களிலும் செல்வச்சந்நிதி, வல்லிபுரக் கோயில், நயினை நாகபூஷணி அம்மன் போன்ற புகழ்பெற்ற ஆலயங்களிலும் மிருதங்க இசையை வழங்கியுள்ளார். காத்தவராயன், அரிச்சந்திரன் போன்ற நாட்டுக்கூத்து நாடகங்களுக்குப் பிற்பாட்டுப் பாடும் திறமையும் கொண்டிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 68