ஆளுமை:தனேஸ்வரி, முத்துக்குமாரு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனேஸ்வரி, முத்துக்குமாரு
தந்தை -
தாய் -
பிறப்பு 1933.06.19
இறப்பு -
ஊர் சுன்னாகம்
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனேஸ்வரி, முத்துக்குமாரு (1933.06.19) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். முறையாக சங்கீதத்தைக் கற்றுள்ள இவர் வாய்ப்பாட்டுடன் வயலின், ஹார்மோனியம் போன்ற வாத்தியக் கருவிகளையும் இசைக்கும் திறன் கொண்டுள்ளதோடு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இசைக் கச்சேரிகளையும் நடாத்தியுள்ளார். 1957முதல் 1969 வரை இலங்கையின் பல பாகங்களில் இவர் தனது இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். 1957, 1961ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நவராத்திரி இசை அரங்கு நிகழ்ச்சியில் இவரும் இவரது சகோதரியும் சுதுமலைச் சகோதரிகள் என்ற பெயரில் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளனர்.

நல்லூர் ஶ்ரீ கணேசா வித்தியா விருத்திச் சங்கத்தின் 24ஆம் ஆண்டு நிறைவு விழா, 1962களில் அகில இலங்கை சங்கீத வித்வத் சபை இசை விழா, வட இலங்கை சங்கீத சபை ஶ்ரீ தியாகராஜ மஹோற்சவம், இலங்கை இசைத்தமிழ் நிலையத்தின் இசை விழா போன்ற பல விழாக்களில் இவர்க்களது இசைக் கச்சேரிகளில் இடம்பெற்றுள்ளன. இவர்களது இசை நிகழ்வுகள் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பிலும், தேசிய ஒலிபரப்பிலும் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 64150 பக்கங்கள் 44