ஆளுமை:ஜெயக்குமாரி, கந்தவேள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயக்குமாரி
தந்தை இராமநாதன்
தாய் லிங்கேஸ்வரி
பிறப்பு 1962.05.03
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயக்குமாரி, கந்தவேள் (1962.05.03) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமநாதன்; தாய் லிங்கேஸ்வரி. ஆரம்பக் கல்வியை மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியிலும், இடைநிலை உயர்நிலைக் கல்வியை மன்னார் அல்-அஸ்ஹார் மகாவித்தியாலயத்திலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக கலைமாணி தமிழ் சிறப்புப்பட்டம் பெற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றார். 2005ஆம் ஆண்டு பட்டபின் கல்வி டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவகத்தில் முடித்துள்ள எழுத்தாளர் சைவசித்தாந்த பண்டிதருமாவார். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் ஜெயக்குமாரி. சிறுகதை, கவிதை, நாடகப் பிரதி எழுதுதல், சிறுவர் நாடகம், சமூக நாடகம், இலக்கிய நாடகம், தாளலய நாடகம், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு, என்பவற்றில் ஈடுபாடு கொண்ட பன்முகத்திறமையுடைய எழுத்தாளர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளுக்கு பல ஆக்கங்களை எழுதியுள்ளார். நிலைத்திருக்க எனும் கவிதைத் தொகுப்பையும் 2010ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். சூடிக்கொடுத்த சுடர்கொடி எனும் தலைப்பில் நாட்டிய நாடக நூலையும் வெளியிட்டுள்ளார். நல்லூர் கந்தன் பாமாலை இறுவெட்டு வெளியிட்டுள்ளார். குகன்துதி என்ற பெயரிலும் இதே இறுவெட்டு பின்னர் வெளியிடப்பட்டுள்ளது. கீர்த்தனை, நாட்டார் பாடல்கள், வரவேற்புப் பாடல்களும் எழுத்தாளர் ஜெயக்குமாரி எழுதி வருகிறார்.

விருதுகள்

தீபம் பத்திரிகை நடத்திய தேசிய மட்ட கவிதைப் போட்டியில் இவரின் கவிதை முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.

மோல்ட்டா தமிழ் கலை கலாசார மன்றம் 1998ஆம் ஆண்டு நடத்திய நகைச்சுவை நாடகப் போட்டியில் தீபாவளி எனும் நாடகப்பிரதி பணப்பரிசை பெற்றது.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் வன்னி மாவட்ட முதன்மை தமிழறிஞர் பட்டம் வழங்கியது.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட இலக்கிய நாடகத் தேர்வில் ”பூங்கனின் தேகே தேரே” என்ற நாடகம் தொல்காப்பிய மாநாட்டில் பரிசு பெற்றது.

குறிப்பு : மேற்படி பதிவு ஜெயக்குமாரி, கந்தவேள் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 3216 பக்கங்கள் {{{2}}}