ஆளுமை:சிங்கராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிங்கராசா
தந்தை கந்தையா
பிறப்பு 1948.05.11
ஊர் அல்வாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிங்கராசா, கந்தையா (1948.05.11 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் யாழ்ப்பாணம் கனகரட்ணம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். இவர் கவிஞர் வே. ஐயாத்துரை, க. இரத்தினம், வ. செல்வரத்தினம், ச. தம்பிஐயா, மு. பொன்னையா, த. கலாமணி ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்று 1966 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கினார்.

இவர் கவிஞர் விவேகானந்தத்துடன் அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன் சாவித்திரி, ஶ்ரீவள்ளி ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழாராய்ச்சி மகாநாட்டில் சிறப்பாக மேடையமைப்புச் செய்தமைக்காகச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 157-158