ஆளுமை:சாமுவேல் பிஸ்க்கிறீன், வில்லியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாமுவேல் பிஸ்கிறீன்
தந்தை வில்லியம்
தாய் ஜூலியா பிளிம்ப்டன்
பிறப்பு 1822.10.10
இறப்பு 1884.01.06
ஊர் மசாசுசெட்ஸ், அமெரிக்கா
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாமுவேல் பிஸ்கிறீன், வில்லியம் (1822.10.10 - 1884.01.06) அமெரிக்கா, மசாசுசெட்ஸைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர். இவரது தந்தை வில்லியம்; இவரது தாய் ஜூலியா பிளிம்ப்டன். இவர் தமது 18 வயதில் கிறிஸ்துவின் சேவையில் தம்மை இணைத்துக் கொண்டார். 1841 இல் நியூயோர்க் மருத்துவக் கல்லூரியில் (The College of Physicians and Surgeons of New York) இணைந்து 1845 இல் மருத்துவராக வெளியேறினார்.

1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்த இவர், வட்டுக்கோட்டையில் தமது பணியை ஆரம்பித்தார். 1848 இல் மானிப்பாய்க்கு இடமாற்றம் பெற்றார். மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றைத் தொடங்கி பணியாற்றி வந்தார். அம்மருத்துவமனை இன்றும் மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனையாக செயற்பட்டு வருகின்றது.

இவர் 24 மருத்துவ நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளார். கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் - Cutter's Anatomy, Physiology and Hygiene, மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் - Maunsell's Obstetrics, பிள்ளைப்பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம் (Midwifery), துருவிதரின் இரணவைத்தியம் - Druitt's Surgery, கிறேயின் அங்காதிபாரதம் - Gray's Anatomy, மனுசகரணம் - Dalton's Physiology, வைத்தியாகரம், கெமிஸ்தம் - Well's Chemistry, வைத்தியம், கலைச் சொற்கள் ஆகியன அவற்றுள் சில. இவை தவிர இந்து பதார்த்த சாரம் - Pharmacopoeia and India, வைத்தியம் - Practice of Medicine ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்பிற்கும் உதவிபுரிந்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 81-84

வெளி இணைப்புக்கள்