ஆளுமை:சரவணமுத்துச் சுவாமிகள், சின்னட்டியார்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்து சுவாமிகள்
தந்தை சின்னட்டியார்
தாய் இராமாசிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்து சுவாமிகள், சின்னட்டியார் புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார். இவரது தந்தை சின்னட்டியார்; தாய் இராமாசிப்பிள்ளை. இவர் இளமையில் மாணிக்கவாசகர், இராமலிங்கர், தாயுமானவர், பட்டினத்தார் பாடிய அருட்பாக்களைப் படிப்பதில் நாட்டமுடையவராய் இருந்தார். அத்தோடு அல்லற்பட்டு வாழும் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்துத் துறவுக் கோலங் கொண்டு பிரம்மச்சாரியாய் காந்தீய இலட்சியத்துடன் வாழ்ந்து வந்தார்.

திருவாசகத்தால் தான் பெற்ற இன்பம் ஏனையோரும் பெறச் செய்வதற்கெண்ணி, திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தெற்குப்பக்கமாக ஒரு திருவாசக மடம் அமைத்து, 1958 ஆம் ஆண்டு தொடக்கம் அம்மடத்தில் தங்கி, கேதீஸ்வரப் பெருமானையும் கௌரி அம்மனையும் தினமும் வழிபட்டு வந்ததுடன் சிவனடியார்களுக்கும் உதவி செய்தார். போரினால் இவரது திருவாசக மடம் அழிந்து போனமையினால் இவரது உறவினர்களான அருளலிங்கம் தம்பதிகள் 2004 இல் இம்மடத்தைப் புணருத்தாரணம் செய்து சரவணமுத்து சாமியாரின் உருவப்படத்தை நிறுவினார்கள். தற்சமயம் சாமியார் மறைந்து விட்ட போதிலும் அவர் அமைத்த மடம் அவருடைய பெயரால் சிவப்பணி செய்கிறது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 137-138