ஆளுமை:சந்திரகௌரி, சிவபாலன்

From நூலகம்
Name சந்திரகௌரி, சிவபாலன்
Pages வேலுப்பிள்ளை
Pages பரமேஸ்வரி
Birth 1960.08.07
Place ஏறாவூர்
Category எழுத்தாளர்

சந்திரகௌரி, சிவபாலன் (1960.08.07 - ) மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் பரமேஸ்வரி. ஏறாவூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் நுகேகொட திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது சிறப்புக் கலைமாணிப் பட்டத் தேர்வுக்காக "இருபதாம் நூற்றாண்டு மட்டக்களப்புத் தமிழ் இலக்கியமும் பிரதேசப் பண்பும்" என்னும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். ஆசிரியராகவும் நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றிய இவர், பின் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தார்.

எழுத்துலகில் இவரது முதலாவது படைப்பான 1986 ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில், 'யானை உரியும் உமையாள் அச்சமும்' என்னும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து கெளசி என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீக சிந்தனைகள், பாடல்கள் போன்ற ஆக்கங்களை இலங்கை தேசிய பத்திரிகைகளிலும் மண், தமிழ்நாதம் போன்ற சஞ்சிகைகளிலும் இலண்டன் தமிழ் வானொலியிலும் எழுதியுள்ளார். என்னையே நானறியேன் (2013) இவரது நாவலாகும்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 93-95
  • நூலக எண்: 1858 பக்கங்கள் 23-27
  • நூலக எண்: முல்லை அமுதனின் எழுத்தாளர் விபரத் திரட்டு பக்கங்கள் 183-184