ஆளுமை:சண்முகவடிவேல்,சு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகவடிவேல்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1948.07.23
ஊர் வவுனியா
வகை கலைஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகவடிவேல்,சு வவுனியாவில் பிறந்த கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் சிற்பக்கலைக் குடும்பத்தை பின்னணியைக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை வ/வவுனியா றோமன் கத்தோலிக்க வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை வ/வவுனியா மகாவித்தியாலயத்திலும் கற்றார். சிற்பக் கலையை இவரின் தந்தையார் சுப்பிரமணியம், மாமனார் கோவிந்தசாமி ஆச்சாரி, சிற்ப மேதை தங்கவேல் ஸ்தபதி ஆகியோிடம் கற்றார். மாமல்லபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் சிற்பக்கலை தொடர்பான பயிற்சியும் பெற்றுள்ளார். 1968ஆம் ஆண்டு அபிராமி சிற்ப நிலையத்தினை நிறுவி செப்பு, வெள்ளி, உலோகப் படிமங்கள் போன்றவற்றினையும் படைத்துள்ளார். இவரின் ஆக்கங்கள் மித்திரன், வீரகேசரி பொன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

இவரது கருங்கல் விக்கிரங்கள் கருங்கல் கலைப் பொருட்கள் தங்கம், வெள்ளியினால் செய்யப்படும் கொடிமரம், கலசம் மற்றும் கிரீடம் போன்ற கலைப் பொருட்கள் வெளிநாடுகளில் டென்மார்க், கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்படுகின்றன. தமிழ், இந்து நாகரிகம், சிற்பக்கலை பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

விருதுகள்

தங்க விருது – கொழும்பு தேசிய கைத்தொழில் சம்மேளனம் 2004.

அருட்கலைவாரிதி – இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் 1993.

கலாபூஷணம் – கலாசார அமைச்சு.

சிற்பக் கலைமாமணி – இந்து மத குருபீடம் 1991.

ஆளுநர் விருது – வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அமைச்சு 2002.

ஜனாதிபதி விருதி – 2007.

சிற்பக் கலை செல்வர் – வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்.

வளங்கள்

  • நூலக எண்: 1898 பக்கங்கள் 39-40