ஆளுமை:சங்கரப்பிள்ளை, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சங்கரப்பிள்ளை
தந்தை ஆறுமுகம்
தாய் கற்பகம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சங்கரப்பிள்ளை, ஆறுமுகம் காரைநகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆறுமுகம்; இவரது தாய் கற்பகம். சங்கரப்பிள்ளை படிப்பில் நாட்டமின்றித் தொழில் விருப்புடையவராக இருந்தமையால் சிறிய தந்தை ஓவசியர் சிதம்பரப்பிள்ளையின் கீழ் ஓவசியராக சில காலம் பணிபுரிந்தார். பின்னர் கொத்திராந்து வேலையில் ஈடுபட்ட இவர், வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றின் கொத்திராந்தினைத் தன் பொறுப்பில் எடுத்துச் சீராக நடத்தி வந்தார். இதன் காரணமாக கோடீஸ்வரரான சங்கரப்பிள்ளை காரைநகர் மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவர்.

இவரின் உதவியினால் பல ஆலயக் கட்டிடங்களும் பள்ளிக்கூடங்களும் எழுந்துள்ளன. இதன் பின் அச்சகத்தொழிலில் 1947 இல் ஈடுபட்டார். ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ரைம்ஸ் ஒஃவ் சிலோன் தாபனத்தை வாங்கி அதன் பணிப்பாளர் சபைத் தலைவராக இருந்தார். இதனால் இவருக்கு ரைம்ஸ் சங்கரப்பிள்ளை என்ற பெயர் வந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 354-356