ஆளுமை:கந்தையா, குட்டி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையா
தந்தை குட்டி
பிறப்பு 1921.06.15
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, குட்டி (1921.06.15 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர், பாடகர். இவரது தந்தை குட்டி. இவர் பதிவுபெற்ற ஆயுர்வேத விஷக்கடி வைத்தியராகவும் விளங்கினார். சிந்துநடைக் கூத்து என்பது ஒருவகைக் கெந்தல் நடையோடு பாடலைக் கலைஞர் பாடப் பின்புலத்தில் உடுக்கை இசையோடு பலர் சேர்ந்து பாடுவதாகும். இக்கூத்து முறையில் காத்தவராசன் கூத்துக்களை நிகழ்த்துவதில் இவர் சிறந்து விளங்கினார். இவரது கூத்துக்கு அக்காலத்தில் பெரும் பதிப்பு காணப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இவரின் கலைப்பணியைப் பாராட்டி அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் கலைப்புகழ் விழா எடுத்ததோடு மலரொன்றையும் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 152
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 142
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கந்தையா,_குட்டி&oldid=405557" இருந்து மீள்விக்கப்பட்டது