ஆளுமை:ஐங்கரன், பெரியதம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஐங்கரன்
தந்தை பெரியதம்பி
தாய் ஜெயமணிதேவி
பிறப்பு 1981.10.11
ஊர் புலோலி
வகை கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐங்கரன், பெரியதம்பி (1981.10.11 - ) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை பெரியதம்பி; தாய் ஜெயமணிதேவி. இவர் தனது ஆரம்பக் கல்வியையும், உயர்தரக் கல்வியையும் யாழ்ப்பாணம் புற்றளை மகாவித்தியாலயத்தில் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்று ஆசிரியராக பணியாற்றுகின்றார்.

இவரது முதலாவது கவிதைப் படைப்பு 2000 ஆம் ஆண்டில் ஞானம் சஞ்சிகையில் கண்கொத்திப் பாம்பு என்னும் தலைப்பில் பிரசுரமானது. தொடர்ந்து நீங்களும் எழுதலாம், ஜீவநதி, மல்லிகை முதலான இதழ்களிலும் வலம்புரி, தினக்குரல், உதயன், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் இவரது படைப்புக்கள் பிரசுரமாகி வருகின்றது. இவரது முதலாவது கவிதைத் தொகுதியான 'எனக்கு மரணம் இல்லை' என்ற நூல் 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து 'ஞானக்கண்', 'வானவில்' ஆகிய கவிதைத் தொகுதிகளையும் ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 152-156