ஆளுமை:உதயகுமாரி, பசுபதி

From நூலகம்
Name உதயகுமாரி, பசுபதி
Pages -
Pages -
Birth -
Pages -
Place வன்னி
Category எழுத்தாளர், ஆசிரியர்

உதயகுமாரி, பசுபதி வன்னி, மல்லாவியூரைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். மல்லாவி மத்திய கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி பயின்றுள்ளார்.

வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் 20 ஆண்டுகள் கணித மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியையாக இவர் கடமையாற்றியுள்ளதோடு இலங்கை கல்வி நிர்வாகச் சேவை (SLEAS) அதி உயர் தகமை சான்றிதழையும் பெற்று வவுனியா மாவட்ட கல்விப் பிராந்தியத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

ஆதிக்கிழவனின் காதல், அத்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள், உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல், பின்னோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள் போன்ற இவரது கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. மேலும் இலங்கை மற்றும் தமிழகத்தில் வெளிவரும் பல்வேறு சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவற்றையும் பார்க்கவும்