ஆளுமை:இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜேஸ்வரி
தந்தை குழந்தைவேல்
தாய் மாரிமுத்து
பிறப்பு 1943.01.01
ஊர் அக்கரைப்பற்று
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம் (1943.01.01) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவிலில் பிறந்த எழுத்தாளர். மூன்று பிள்ளைகளுக்கு தாயுமாவார். 1970ஆம் ஆண்டு முதல் இலண்டனில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், கட்டுரை எழுதுவதென பன்முகத்திறமைகளைக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் தாதியாகப் பணிபுரிந்த இராஜேஸ்வரி இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப்பட்டம் (BA) (London College of Printing 1988) பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். மானிட மருத்துவ வரலாற்றுத்துறையில் முதுமாணிப் பட்டம் (MA) (1996 London University) பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் கருதப்படுகிறார். இலங்கையில் 1960ஆம்அண்டுக்கு பின்னர் பல பெண் எழுத்தாளர்கள் இலக்கியத்துறையில் பிரவேசிக்கத் தொடங்கினர்

சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். மருத்துவ நூல்கள், ஆராய்ச்சி நூல் முதலானவற்றையும் சிறுகதை, நாவல் முதலிய ஆக்க இலக்கியங்களை படைத்துள்ளார். தாயும் சேயும் என்ற மருத்துவ நூலை 2002ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். உங்கள் உடல் உளம் பாலியல் நலம் பற்றிய மருத்துவ அறிவியல் வகையைச் சேர்ந்த நூல் 2003ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். தமிழ்கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும் எனும் நூலை 200ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். ஒரு கோடை விடுமுறை என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார். இந் நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டதாகும். தில்லையாற்றங்கரை, உலகமெல்லாம் வியாபாரிகள், தேம்ஸ் நதிக்கரையில் (1992), பனி பெய்யும் இரவுகள் (1993) வசந்தம் வந்து போய்விட்டது (1997), அவனும் சில வருடங்களும் (2000) ஆகிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

Escape From Genocide – A video (Based on Tamil Refugees from Sri Lanka) – 1986, The Private Place – A 16mm film (Issues on Rape in Marriage) – 1988 ஆகிய திரைப்படங்களை எடுத்துள்ளார்.

நூலகத்தில் இவரது ஆக்கங்கள்

வெளி இணைப்புக்கள்