ஆளுமை:ஆயிஷா, இப்ராஹிம்

From நூலகம்
Name ஆயிஷா
Pages முஹம்மட் ஷரீப்
Pages உம்மு றெஜீனா
Birth 1942.07.02
Place மாவனல்லை
Category எழுத்தாளர்

ஆயிஷா, இப்ராஹிம் (1942.07.02) மாவனல்லை ஹிங்குலோயாவையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மட் ஷரீப்; தாய் உம்மு றெஜீனா. 1963ஆம் ஆண்டு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்று 1965ஆம் ஆண்டு கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியர் நியமனம் பெற்றார். 2002ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான ”பொற்கலசம்” எனும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். எதிர்காலத்திலும் இவ்வாறான ஆய்வு நூலை வெளியிடத் தயாராகி வருகிறார் இதற்குரிய தகவல்களைத் தேடிச் சேகரித்து வருகிறார் ஆயிஷா.

படைப்புகள்

  • பொற்கலசம்

வெளி இணைப்புக்கள்