ஆளுமை:ஆனந்தன், செல்வகுமார்

From நூலகம்
Name ஆனந்தன்
Pages செல்வகுமார்
Birth 1943.05.25
Pages 1984.08.06
Place வல்வெட்டித்துறை
Category கலைஞர், எழுத்தாளர்

ஆனந்தன், செல்வகுமார் (1943.05.25 -1984.08.06) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சாதனையாளர், நீச்சல் வீரர், வழக்கறிஞர். இவரது தந்தை செல்வகுமார். இவர் சிவகுரு வித்தியாசாலை, வல்வை சிதம்பராக் கல்லூரி, யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

ஆழிக்குமரன் ஆனந்தன், குமார் ஆனந்தன் புனைபெயர்களைக் கொண்ட இவர், 1963.03.20 அன்று பாக்குநீரிணையை நீந்திக் கடந்த வீரர். ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். 1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975 இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் ஆழிக்குமரன் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார். 1979 மே மாதம் 187 மணி நேரம் இடைவிடாது தொடர்ந்து 1487 மைல்கள் சைக்கிள் ஒட்டியமை, 1979 டிசம்பர் மாதம் கொழும்பில் 136 மணி நேரம் போல் பஞ்சிங் செய்தமை, 1980 மே மாதம் ஒற்றைக் காலில் 33 மணிநேரம் நின்றமை ஆகியன போன்ற உலக சாதனைகளைச் செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 329
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 45

வெளி இணைப்புக்கள்