ஆளுமை:ஆதம்பாவா, உதுமாலெவ்வை

From நூலகம்
Name ஆதம்பாவா
Pages உதுமாலெவ்வை
Pages சல்ஹா உம்மா
Birth 1939.06.15
Place அம்பாறை
Category எழுத்தாளர்

ஆதம்பாவா, உதுமாலெவ்வை (1939.06.15 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை உதுமாலெவ்வை; தாய் சல்ஹா உம்மா. சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம், கல்முனை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், பயிற்றப்பட்ட தமிழ்மொழி ஆசிரியராக 38 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

1961 ஆம் ஆண்டு மணிக்குரலில் 'மலையருவி' என்னும் கவிதை மூலம் எழுத ஆரம்பித்த இவர், அன்றிலிருந்து இன்று வரை 45 சிறுகதைகள், 48 உருவகக் கதைகள், 55 கவிதைகள், கட்டுரைகளை மணிக்குரல், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுதந்திரன், மாலைமதி, ஸாஹிரா இதழ்களில் எழுதியுள்ளார். நாங்கள் மனித இனம், காணிக்கை, பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம் இரங்கல் கவிதைத் தொகுதி ஆகியவை இவரது நூல்கள்.

1999 இல் கலாபூசணம் விருது பெற்றுள்ளார்.


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 50-53