ஆளுமை:அழகேந்திரன், அப்புத்துரை

From நூலகம்
Name அழகேந்திரன்
Pages அப்புத்துரை
Birth 1954.02.14
Place தெல்லிப்பளை
Category கலைஞர்

அழகேந்திரன், அப்புத்துரை (1954.02.14 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை அப்புத்துரை. 1970 ஆம் ஆண்டிலிருந்து வில்லுப்பாட்டு, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வரும் இவர், பாடசாலைக் காலங்களில் புராணக் கதைகளை நாடகமாக்கி நடித்தும், மாணவ கலைப்பெரு மன்றத்தினை உருவாக்கித் தலைமை தாங்கி நாடகங்கள் பழக்கி நடித்தும், வில்லுப்பாட்டுக்களை நிகழ்த்தியும் வந்துள்ளார். இவர் 2 ஆவது உலக மகாநாட்டில் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இவர் கலைமணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 81