ஆளுமை:அல்பிரட் தம்பிஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை

From நூலகம்
Name அல்பிரட் தம்பி ஐயா
Pages பிலிப் மனுவேற்பிள்ளை
Pages ரோசாமுத்து
Birth 1903.11.08
Place கரம்பன்
Category கலைஞர்

அல்பிரட் தம்பி ஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை (1903.08.11 - ) யாழ்ப்பாணம், கரம்பனைச் சேர்ந்த சினிமாக் கலைஞர். இவரது தந்தை பிலிப் மனுவேற்பிள்ளை: தாய் ரோசாமுத்து. இவர் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றதோடு இங்கிலாந்திற்குச் சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.

இவர் தனது சினிமாத் தொழிலை விருத்தி செய்ய விரும்பித் தனது நண்பரான சேர். சிற்றம்பலம் கார்டினரைத் துணையாகச் சேர்த்துச் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை வாங்கினார். இது இலங்கையின் முதன்மையான சினிமா நிறுவனமாக உயர்ந்தது. மேலும் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், 1948 இல் முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஊர்காவற்துறைப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 21-25