ஆளுமை:அலியார், உதுமா லெவ்வை

From நூலகம்
Name அலியார்
Pages உதுமா லெவ்வை
Birth 1946.02.21
Place அம்பாறை
Category எழுத்தாளர்


அலியார், உதுமா லெவ்வை (1946.02.21 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கல்வியாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை உதுமா லெவ்வை. இவர் அலியார் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா மக்கோரிப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றுள்ளார்.


அறிவுசார் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கலாபூஷணம் விருது பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 13-18.