ஆளுமை:அலாவுதீன், ஆதம்லெவ்வை

From நூலகம்
Name அலாவுதீன்
Pages ஆதம்லெவ்வை
Birth 1956.02.27
Place பொத்துவில்
Category எழுத்தாளர்

அலாவுதீன், ஆதம்லெவ்வை (1956.02.27 - ) அம்பாறை, பொத்துவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆதம்லெவ்வை. இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிராக் கல்லூரி, ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவர் ஒலுவில் அமுதன் என்னும் புனைபெயரில் கிட்டத்தட்ட 30 சிறுகதைகளையும், 120 கவிதைகளையும், 40 கட்டுரைகளையும், 4 நாவல்களையும், 6 மெல்லிசைப் பாடல்களையும், 4 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது முதலாவது கவிதை 1976 பெப்ரவரியில் நடிப்பு எனும் தலைப்பில் தினகரனில் பிரசுரமானது. மனக்கோலம், மரணம் வரும் வரைக்கும் ஆகிய கவிதைத் தொகுதிகளையும், கலையாத மேகங்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும், நாம் ஒன்று நினைக்க, கரையைத் தொடாத அலைகள் போன்ற நாவல்களையும், மனங்களிலே நிறங்கள், கூடில்லாத குருவிகள் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 91-93