ஆளுமை:அருள்பிரகாசம், ஆறுமுகம்

From நூலகம்
Name அருள்பிரகாசம்
Pages ஆறுமுகம்
Birth 1899.03.09
Place வல்வெட்டித்துறை
Category வழக்கறிஞர்

அருள்பிரகாசம், ஆறுமுகம் (1899.03.09 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றதோடு சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று சட்டத்துறைப் பட்டதாரியாக வெளியேறினார். இவர் நில அளவையாளராகக் கடமையாற்றிய வேளையில் Registration of Title of Lands என்ற முறையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் வடமேல் மாகாணத்தின் அரச அதிபராகவும் கடமையாற்றியுள்ளதோடு, இலங்கைத் தேர்தல் ஆணையாளராகக் கடமையாற்றிய முதற்தமிழ் மகனும் இவராவார்.

Resources

  • நூலக எண்: 11850 பக்கங்கள் 63-65