ஆளுமை:அருணந்தி, கதிர்காமர் சடையனார்

From நூலகம்
Name அருணந்தி
Pages கதிர்காமர் சடையனார்
Pages தெய்வானைப்பிள்ளை
Birth 1899.03.25
Place சங்குவேலி
Category அரச உத்தியோகத்தர்

அருணந்தி, கதிர்காமர் சடையனார் (1899.03.25 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். இவரது தந்தை கதிர்காமர் சடையனார்; தாய் தெய்வானைப்பிள்ளை. இவர் ஆரம்பக் கல்வியை கந்தரோடை ஆங்கிலப் பாடசாலையிலும் (ஸ்கந்தவரோதயக் கல்லூரி) பின்னர் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானமாணிப் பரீட்சையில் முதற்பிரிவில் சித்தியடைந்துள்ளார்.

இவர் பரீட்சைக் குழுவின் உறுப்பினராகவும், கல்வி ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினராகவும், கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், பாடப்புத்தக ஆக்கக் குழுவின் உறுப்பினராகவும், இலங்கைக் கல்விமுறை வெளியீட்டின் ஆங்கில தமிழ்ப் பகுதிகளின் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் கைத்தொழிற் பிரச்சனைக் கூட்ட நிர்வாகத்தில் மத்தியஸ்தராகவும், இலங்கைப் போக்குவரத்துச்சபை தொழிலாளர் நீதிமன்ற அங்கத்தினராகவும் கடமையாற்றியதோடு பல விஞ்ஞான நூல்களைக் கலாசாலை மாணவர்களின் உபயோகத்திற்காகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 16158 பக்கங்கள் 28-31