ஆளுமை:அம்பிகா, முருகையா

From நூலகம்
Name அம்பிகா
Pages முருகையா
Birth 1993.07.07
Place அப்புத்தளை
Category கல்வியியலாளர்

அம்பிகா, முருகையா (1993.07.07 - ) அப்புத்தளை, நிக்கபொத்தையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை முருகையா. இவர் அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். தொடர்ந்து இளங்கலைமாணிப் பட்டப்படிப்பினையும் கற்றுள்ளார். அறநெறிப் பாடசாலை இறுதி நிலைப் பரீட்சை, இந்து தர்மாசிரியர் பரீட்சை ஆகிய பரீட்சைகளில் சித்தி அடைந்த இவர் பதுளை பிளக்வூட் இல. 01 தமிழ் வித்தியாலயத்தில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் அப்புத்தளை சைவ இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலையின் அறநெறி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 48