ஆளுமை:அம்பலவாணர், சண்முகம் (அம்பலச் சட்டம்பியார்)

From நூலகம்
Name அம்பலவாணர்
Pages சண்முகம்
Pages சின்னாச்சிப்பிள்ளை
Birth
Pages 1935
Place காரைநகர்
Category ஆசிரியர்

அம்பலவாணர், சண்முகம் ( - 1935) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சண்முகம்; தாய் சின்னாசிப்பிள்ளை. தெல்லிப்பளை அமெரிக்கமிஷன் பாடசாலையில் திரு ஜெருமையா, அல்லின் ஏபிரகாம் ஆகியோரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ச்சிபெற்ற ஆசிரியராகப் பட்டம் பெற்றார்.

சில நாள் ஆசிரியராகப் பணி புரிந்த பின்னர் மலாய் நாட்டில் ரவுண் ஓவசியராகப் பணியாற்றினார். அதன் பின் மீண்டும் தாய் நாட்டிற்கு வந்து ஆங்கில வித்தியாசாலையில் தமிழ்ப்பண்டிதராக 18 ஆண்டுகள் பணியாற்றினார். 1933 இல் ஆசிரியப் பதவியிலிருந்து இளைப்பாறினார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 303-304