ஆளுமை:அப்துல் ஸலாம், அப்துல் அலி

From நூலகம்
Name அப்துல் ஸலாம்
Pages அப்துல் அலி
Birth 1962.05.15
Place திருகோணமலை
Category எழுத்தாளர்

அப்துல் ஸலாம், அப்துல் அலி (1962.05.15 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் அலி. பெரிய கிண்ணியா அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கற்று பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராக கம்பகா அல்பத்திரியா மத்திய வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

1985 இல் எழுதத் தொடங்கிய இவர் கிண்ணியா மாஸ்டர், அபூரஸான் ஆகிய புனைபெயர்களிலும் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மணிக்கவிதைகள், நூல் ஆய்வுகள், விமர்சனங்கள், சிறுவர் கவிதைகள் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 133-135