ஆளுமை:அப்துல் அஸீஸ், மர்ஹூமான நெய்னா

From நூலகம்
Name அப்துல் அஸீஸ்
Pages மர்ஹூமான நெய்னா
Pages முஹம்மத் ஹவ்வா
Birth
Place மாத்தளை
Category எழுத்தாளர், ஓவியர், நடிகர்

அப்துல் அஸீஸ், மர்ஹூமான நெய்னா மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஓவியர், நடிகர். இவரது தந்தை மர்ஹூமான நெய்னா; தாய் முஹம்மத் ஹவ்வா. பயிற்றப்பட்ட சித்திர ஆசிரியரான இவர் 1954இல் நுண்கலைப்பீட சான்றிதழையும் பெற்றுள்ளார்.

நகைச்சுவை நாடகங்கள், சமூக,கலாச்சார நாடகங்கள், தமிழ்,சிங்கள மேடை நாடகங்கள் என்பவற்றை எழுதி நடித்துள்ளார். சித்திரத் தொடர்கதை, அரசியல் கேலிச் சித்திரங்கள், கதைகளுக்கான சித்திரங்கள் போன்ற பல்வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இலங்கையில் அரபு எழுத்தணிக் கலையை முதலில் அறிமுகம் செய்தவர் எனப்படுகின்றார்.

Resources

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 68-70