ஆளுமை:அபூதாலிப், மயிதீன் பாவா

From நூலகம்
Name அபூதாலிப்
Pages மயிதீன் பாவா
Pages பாத்தும்மா பீவி
Birth 1952.12.17
Place அநுராதபுரம்
Category எழுத்தாளர்

அபூதாலிப், மயிதீன் (1952.12.17 - ) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், ஆசிரியர். இவரது தந்தை மயிதீன் பாவா; தாய் பாத்தும்மா பீவி. இவர் அனுராதபுரம் நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். 1977 இல் ஆசிரியர் பணியில் இணைந்த இவர், 1982 இல் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணிதொடர்ந்தார்.

சிறுகதைகள், உருவகக் கதைகள், போன்ற ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினபதி, சங்கமம், இடி, நவமணி போன்றவற்றில் வெளியாகின. தினகரன் பத்திரிகையின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 64-66