ஆளுமை:அன்ரன் இக்னேசியஸ் யோசப், லூசன் ஜோர்ஜ் ஜோசப்

From நூலகம்
Name அன்ரன் இக்னேசியஸ் யோசப்
Pages லூசன் ஜோர்ஜ் யோசப்
Pages றீற்றா லீலா
Birth
Place யாழ்ப்பாணம்
Category ஆவணப்படுத்துனர்

அன்ரன் இக்னேசியஸ் யோசப், லூசன் ஜோர்ஜ் யோசப் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆவணக்காரர். இவரது தந்தை லூசன் ஜோர்ஜ் யோசப்; தாய் றீற்றா லீலா. இவர் யாழ்ப்பாணம் சம்பத்தாசிரியர் கல்லூரியில் கல்வி பயின்றார்.

1991 ஆம் ஆண்டிலிருந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கிய இவர், முத்திரைகள், முதல்நாள் தபால் உறைகள், பழைய புதிய நாணயங்கள், தமிழ்ப் பத்திரிகைகள், கேலிச் சித்திரங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், விடுதலைப் புலிகளின் வெளியீடுகளான ஒலி, ஒளி நாடாக்கள், இசைத்தட்டுக்கள் மற்றும் தமிழ், சிங்கள, ஆங்கில, இந்தி இசைத் தட்டுக்கள் ஆகியவற்றைச் சேகரித்து வருகின்றார். இவரது ஆவணக் கண்காட்சி 2004.04.11 இல் ஜேர்மன் முன்சன் நகரில் நடைபெற்றது. சுமார் 200 நாடுகளின் பழைய, புதிய பணத்தாள்கள், 150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், 150 நாடுகளின் தபாற் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், 35 தமிழ் பத்திரிகைகள் என்பன இக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

Resources

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 85-87