ஆளுமை:அன்பழகி, கஜேந்திரா

From நூலகம்
Name அன்பழகி
Pages விநாயகமூர்த்தி
Pages இராஜேஸ்வரி
Birth 1983.09.24
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்

அன்பழகி, கஜேந்திரா (1983.09.24) யாழ்ப்பாணம், வேலணையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை விநாயகமூர்த்தி; தாய் இராஜேஸ்வரி. சிறுவயதியே தாய் தந்தையரை இழந்து போர்க்கால சூழ்நிலைக்குள் அகப்பட்டு கல்வியைத் தொடர முடியாமல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து படைத்துறைப் பள்ளியில் கல்வி கற்றுள்ளார். 2006ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பின் தமிழ் மீதும் கவிதை மீதும் உள்ள அதீத அன்பினால் கவிதைகளை எழுதத் தொடங்கியுள்ளார். இன்று பல தொலைக்காட்சிக் கவிதை நிகழ்ச்சிகள், வானொலிக் கவிச்சமர், கவிதை நிகழ்ச்சிகள் பங்குபற்றி வருகிறார். இலங்கையில் வெளிவரும் பல பத்திரிகைகளில் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. படித்தவர் மட்டுமே சாதிக்க முடியும் என்ற கூற்றினை முற்றிலும் பொய் எனக் கூறுகின்றார் அன்பழகி கஜேந்திரா. தமிழ் கவிதாயினி என்று தன்னைக் கூறிக்கொள்வதில் பெருமைக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். தமிழ் உலகத்திற்குப் பல படைப்புக்களைக் கொடுப்பதைத் தனது இலட்சியமாகக்கொண்டு செயற்பட்டு வரும் எழுத்தாளர். உனக்குள் நீ எனும் புதுக்கவிதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார். இவரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக குறுகிய காலத்திலேயே பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

விருதுகள்

இந்திய குழுக்கள் நடத்திய போட்டிகள் பலவற்றில் பங்குபற்றி கவிதாசாகரம் விருது, கவிச்சரம் விருது, கிராமிய நாயகி விருது, கண்ணதாசன் விருது


குறிப்பு : மேற்படி பதிவு அன்பழகி, கஜேந்திரா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்