ஆளுமை:அனுஷா, அமீர் அலி

From நூலகம்
Name அனுஷா
Pages அஸீஸ்
Pages ஹாஜரா
Birth
Place சம்மாந்துறை
Category எழுத்தாளர்

அனுஷா, அமீர் அலி அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அஸீஸ்; தாய் ஹாஜரா. ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர் கல்வி வரை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கற்றார். இவரின் கணவரின் பெயர் அமீர் அலி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கவிதை, பேச்சு, விவாதம், கட்டுரை என கலை இலக்கியத்துறையில் மிகவும் ஈடுபாடுகொண்டவர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். வானொலியின் நிகழ்ச்சிகளும் ஊவா சமூக வானொலியின் நிகழ்ச்சிகளும் இவரது கவிதைப் படைப்புக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. கவிதைத் தூறல்கள் எனும் நூலை 2010ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். கவிதை எழுதுவதுடன் வியாபாரத்திலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

வெளி இணைப்புக்கள்