ஆளுமை:அந்தோனிக்குட்டி அண்ணாவியார்

From நூலகம்
Name அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
Birth
Place தமிழ்நாடு
Category புலவர்

அந்தோனிக்குட்டி அண்ணாவியார் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் மணப்பாறை என்னும் ஊரில் பிறந்த புலவர். கத்தோலிக்க சமயத்தவரான இவர், கல்வி கற்பித்தும் தமிழ் நூல்களை இயற்றியும் சமயத் தொண்டு புரிந்தும் வந்துள்ளார். அக்காலப் பாதிரிமாருடன் முரண்பட்டதால் யாழ்ப்பாணத்தில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.

பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பத்து, அருள் வாசகம், இயேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனந்தமஞ்சம், கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமய கீர்த்தனம் என்னும் திரட்டு நூலாக (1891) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டன.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 07-08