ஆளுமை:அஜந்தகுமார், தருமராசா

From நூலகம்
Name அஜந்தகுமார்
Pages தருமராசா
Pages கமலாதேவி
Birth 1984.08.28
Place கரவெட்டி
Category எழுத்தாளர்

அஜந்தகுமார், தருமராசா (1984.08.28 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தருமராசா; தாய் கமலாதேவி. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திலும் கல்வி கற்றார். கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல் விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபடுகிறார்.

சிறுவர் பாதுகாப்பு நிதியம் அனுசரணையுடனான துளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும், புதியதரிசனம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். தனித்துத் தெரியும் திசை, ஒரு சோம்பேறியின் கடல் (2009), படைப்பின் கதவுகள் (2013), அப்பாவின் சித்திரங்கள் (2013) என்ற அப்பா பற்றிய நினைவுக் கவிதை நூல் ஆகியன இவரது நூல்கள். செ.கதிர்காமநாதன் படைப்புகள் தொகுதியின் இணைத் தொகுப்பாசிரியர். துளிக்காற்று என்ற பயிற்சிப் பட்டறைக் கவிதைகள் நூலின் தொகுப்பாசிரியர்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 1029 பக்கங்கள் 28
  • நூலக எண்: 1203 பக்கங்கள் 13
  • நூலக எண்: 13164 பக்கங்கள் 26-30