ஆளுமை:அகிலன், வேலாயுதன்

From நூலகம்
Name அகிலன்
Pages வேலாயுதன்
Birth
Place வதிரி
Category எழுத்தாளர்

அகிலன், வேலாயுதன் யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதன். யாழ்ப்பாணம் கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், கலைமாணிப் பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்று, கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.

இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் வலம்புரி, சங்குநாதம், உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவர் இரத்தினமாலை (கட்டுரைகள், 2001), கவிவானம் பொழிகிறது (கவிதைகள், 2004) போன்றவை இவரது நூல்கள். சொல்லாத சோகங்கள் என்ற நெடுங்கவிதைத் தொடரையும் வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3224 பக்கங்கள் 26