ஆளுமை:அகஸ்ரின், சூசை

From நூலகம்
Name அகஸ்ரின்
Pages சூசை
Birth 1948.02.27
Place மாதகல்
Category கலைஞர்

அகஸ்ரின், சூசை (1948.02.27 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசை. தந்தையின் வழிகாட்டலில் ஆர்மோனியத்தையும் கலைவேந்தன் பிரான்சிஸ் வழிகாட்டலில் நாட்டுக்கூத்தையும் கற்று 1975 முதல் கலைத்துறையில் ஈடுபட்டுள்ளார்.

இவர் நாட்டுக்கூத்துக்கள், சிந்துநடைக் கூத்துக்கள் போன்றவற்றிற்கு ஆர்மோனியம் இசைத்தல், நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்றனவற்றுடன் இளைய தலைமுறைக் கலைஞர்களை இசை, நாடகம் போன்ற கலைகளில் உருவாக்கியுள்ளார். இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் 'கலைஞான கேசரி' பட்டமும் (2001) திருமுறைக்கலாமன்றத்தின் 'அண்ணாவியார்' பட்டமும் (2007) பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 121